நாளை தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

news18
Updated: March 13, 2018, 4:09 PM IST
நாளை தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் 14,15-இல் கனமழைக்கு வாய்ப்பு
news18
Updated: March 13, 2018, 4:09 PM IST
தென் தமிழகத்தில் மார்ச் 14,15 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் மாலத்தீவுகள் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இது மாலத்தீவுக்கு கிழக்கே 290 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகரும். இதனால், தென் தமிழகத்தில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடதமிழகத்தில் 14-ஆம் தேதி மிதமான மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா, மாலத்தீவுகள், தெற்கு கேரள கடற்பகுதியில் 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

எனவே, இந்தப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகருவதால் 14, 15-ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்