Home /News /tamil-nadu /

கனமழை: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

School leave

School leave

தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியில்  கனமழை பெய்து வருகிறது. 

     தமிழகத்தில் கனமழை காரணமாக மதுரை விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடியற்காலை முதல் கனமழை பெய்து வருகிறது.  அதிகாலை முதலே மழை பெய்ததை அடுத்து நகரமே குளிர்ச்சியாக காணப்படுகிறது. மதுரை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியில்  கனமழை பெய்து வருகிறது.

    மழையில் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    விருதுநகர்:  தொடர் மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (04.12.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி : தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.12.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது.

    நாமக்கல்: மழையை முன்னிட்டு, இன்று (04.12.2021) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

    மதுரை: மதுரையில் இன்று காலை முதலே பரவலாக கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Heavy Rainfall, Holiday, Man soon Rain, School Holiday, School students, Tamil News

    அடுத்த செய்தி