ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'பொறுமையை சோதிக்கும்.. மழை வெளுக்கும்' கனமழை குறித்து அலெர்ட் கொடுத்த வெதர்மேன்!

'பொறுமையை சோதிக்கும்.. மழை வெளுக்கும்' கனமழை குறித்து அலெர்ட் கொடுத்த வெதர்மேன்!

மழை

மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தாழ்வு பகுதி, தற்போது வடகிழக்கு தமிழகத்தில் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக கிழக்கு நோக்கி  நகர்ந்து சென்னை மற்றும் ஆந்திர எல்லை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவான நிலையில் வடகிழக்கு தமிழக பகுதியில் இருப்பதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மழைபெய்யும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்ற அச்சத்தில் தமிழக அரசு ஆரஞ்சு அலெர்ட் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. 21, 22 ஆம் தேதிகளில் இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்யும் என வெதர்மேன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தாழ்வு பகுதி, தற்போது வடகிழக்கு தமிழகத்தில் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக கிழக்கு நோக்கி  நகர்ந்து சென்னை மற்றும் ஆந்திர எல்லை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் இந்த நகர்வு என்பது நீண்ட நேரம் எடுக்கும்.

இதையும் படிங்க:மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

இது உங்கள் பொறுமையை சோதிப்பதாக இருக்கலாம். ஆனால் இந்த மெதுவான நகர்வு காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வெதெர்மன் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இது ஆந்திர எல்லையை நோக்கி நகரும் என்று வெதெர்மேன் தெரிவித்துள்ளார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Heavy rain, Weather News in Tamil