தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை.. செய்யார், சூளகிரி பகுதிகளில் 10 செ.மீ. மழை பதிவு!

கோப்புக்காட்சி

திருவண்ணாமலையின் செய்யார் மற்றும் கிருஷ்ணகிரியின் சூலகிரி ஆகிய பகுதிகளில் பத்து செண்டிமீட்டர் மழை பதிவானது. செங்கல்பட்டுமாவட்டம் உத்திரமேரூர், செய்யூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகிய பகுதிகளில் 9 செண்டிமீட்டர் மழையும் நீலகிரியின் நடுவட்டம்  பகுதியில் 8 செண்டி மீட்டர் மழையும் பதிவானது.

  • Share this:
    சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று  பலத்த மழை பெய்தது.

    தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.  அதன்படி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை,  நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், காரைக்கால், புதுக்கோட்டை, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குறிப்பாக, திருவண்ணாமலையின் செய்யார் மற்றும் கிருஷ்ணகிரியின் சூலகிரி ஆகிய பகுதிகளில் பத்து செண்டிமீட்டர் மழை பதிவானது. செங்கல்பட்டுமாவட்டம் உத்திரமேரூர், செய்யூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகிய பகுதிகளில் 9 செண்டிமீட்டர் மழையும் நீலகிரியின் நடுவட்டம்  பகுதியில் 8 செண்டி மீட்டர் மழையும் பதிவானது.

    மேலும் படிக்க: அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...


    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை  பரவலாக மழை பெய்தது. ஒருசில இடங்களில் காற்றுடன் கனமழை பெய்தது.  தமிழகத்தில் அடுத்த நான்கு தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...


    18.07.2021 முதல் 21.07.2021 வரை: தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல், அரபிக் கடலில் இன்று கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published: