• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

25, 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் 3.1 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று (22.11.2021) ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள். மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    மேலும், நாளை (23.11.2021) மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர வட மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    புதன் கிழமை (24.11.2021) ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    25, 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்), தென்பரநாடு (திருச்சி), மூக்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 4, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), எடப்பாடி (சேலம்), பந்தலூர் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்) கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 3, எம்ஆர்சி நகர் (சென்னை), ஒய்எம்சி நந்தனம் (சென்னை), தேவாலா (நீலகிரி), எம்ஜிஆர் நகர் (சென்னை), தரமணி (சென்னை), சென்னை (நுங்கம்பாக்கம்) (சென்னை) தலா 2,

    Must Read : பாலாறு-பொன்னையாறு சங்கமிக்கும் மேல்விஷாரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

    பெரம்பூர் (சென்னை), பள்ளிக்கரணை (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை), சத்தியபாமா (செங்கல்பட்டு) எருமப்பட்டி (நாமக்கல்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சங்கரிதுர்க் (சேலம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தளி (கிருஷ்ணகிரி), சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்) தலா 1 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: