• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு

பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு

மழை - கோப்புப் படம்

மழை - கோப்புப் படம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் கேரளாவில்ன் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதுல் சனிக்கிழமை வரை சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்றும், நாளையும் (அக்டோபர் 21) தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்.

    ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    23ஆம் தேதி (சனிக்கிழமை) வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

    Must Read : தீபாவளிக்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

    ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: