தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

மாதிரிப்படம்

நாளை மற்றும் நாளை மறுநாள்  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.

  • Share this:
    வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக  இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தேனி திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    நாளை மற்றும் நாளை மறுநாள்  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

    12.07.2021, 13.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

    10.07.2021முதல்12.07.2021வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதனாலும் பொதுமக்கள் மலைஏற்றத்தை தவிர்க்கவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்..

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
    கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) 14, சுலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 13 , ஆரணி (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 11, தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 10, ஆத்தூர் (சேலம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பண்ருட்டி (கடலூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 9, வாலாஜா (ராணிப்பேட்டை) , 8, மதுராந்தகம் (செங்கல்பட்டு), கொரட்டூர் (திருவள்ளூர்), திருபுவனம் (சிவகங்கை), அலங்காயம் (திருப்பத்தூர்), புலிப்பட்டி (மதுரை), அம்முண்டி (வேலூர்), மைலம் (விழுப்புரம்) தலா 7, சோழவந்தான் (மதுரை), செங்கம் (திருவண்ணாமலை), டிஜிபி அலுவலகம் (சென்னை), புதுச்சேரி, காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    வங்க கடல் பகுதிகள்:

    09.07.2021 முதல் 12.07.2021 வரை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    10.07.2021 முதல் 12.07.2021 வரை மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
    மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அரபிக்கடல் பகுதிகள்:

    09.07.2021 முதல் 11.07.2021 வரை :, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    12.07.2021 , 13.07.2021 : கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    09.07.2021 முதல் 13.07.2021 வரை: தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: