தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட் அலெர்ட்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட் அலெர்ட்
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பாக இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், குஜராத், கேரளா, மகாராஷ்ட்ரா மற்றும் வடக்கு கர்நாடகா பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 4 நாட்களில் 258 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  வரலாறு காணாத அளவிற்கு மழையை பெற்றுள்ள அவலாஞ்சியில் மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  பகல் நேரங்களில் மிதமான மழையும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்கிறது.நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சியில் வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 45 சென்டி மீட்டர் மழை பதிவானது.

தென் தமிழகப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை  கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும், 4 நாட்களில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Also Watch: அவலாஞ்சியில் அதிக மழை பொழிவுக்கு காரணம் என்ன?

First published: August 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading