• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரெட் அலர்ட் : தமிழகத்தில் ஆங்காங்கே விடிய விடிய கொட்டிய மழை

ரெட் அலர்ட் : தமிழகத்தில் ஆங்காங்கே விடிய விடிய கொட்டிய மழை

கனமழை

கனமழை

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பெருமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்தது.

  • Share this:
    வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பெருமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்தது.

    இந்நிலையியில், நேற்று இரவு சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை, மெரினா, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் பலத்த மழை பெய்தது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு மற்றும் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், பலத்த மழை கொட்டியது. சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்தது.

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. செவிலிமேடு, பேருந்து நிலையம், வாலாஜாபாத், ஶ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால், சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மழையின் காரணமாக இரவு நேரப் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் அவதிப்பட்டனர்.

    திருப்பூரில் நேற்று மாலை முதல் 4 மணி நேரத்திற்கும் மேலாக, தொடர்ந்து பெய்த மழை காரணமாக, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மங்கலம் சாலை, பல்லடம் சாலை, பெருமாநல்லூர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளில் மழைநீர் புகுந்ததால், போயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓரு சிலர் வீடுகளில் இருந்த மழைநீரை வாரி இரைத்த நிலையில், சிலர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர.

    நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த தொடர்மழையால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. 4 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த மழையால் காந்தள், கீரின்பீல்ட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் நகராட்சி சந்தையில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து நிலைய சாலையில் தண்ணீரில் சிக்கிய வாகனங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கன மழையின் காரணமாக சாலைகளால் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை தொடங்கி 3 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. ஏரிச்சாலை, மூஞ்சிக்க‌ல், செண்ப‌க‌னூர் பகுதிகளில் இரவு வரை பெய்த, சாரல் மழை பெய்தது. கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில், பூல‌த்தூர் பிரிவு அருகே ம‌ர‌ம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது, ந‌ண்டாங்க‌ரை ம‌ற்றும் கும்ப‌ரையூர் பிரிவு அருகே ஏற்ப‌ட்ட‌ லேசான‌ ம‌ண்ச‌ரிவினையும், சாலையின் குறுக்கே விழுந்த‌ ம‌ர‌த்தினையும் நெடுஞ்சாலைதுறையின‌ர் துரித‌மாக‌ அக‌ற்றி போக்குவ‌ர‌த்தை சீர் செய்த‌ன‌ர்

    இந்நிலையில், கோவை மாநகரில் 2 மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இதேபோல, தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள, சி.எல்.சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, நீரோட்டத்தை சீர் படுத்தும் நோக்கில், கிளை ஆறுகளில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றை, அகற்றும் பணிகள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.

    Must Read : மீண்டும் கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    இதேபோன்று கரூர், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. சேலத்திலும் இரவு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: