முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கனமழை எதிரொலி.. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை எதிரொலி.. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கனமழை காரணமாக விழுப்புரம், மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

  • Last Updated :

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக  சாலைகளில் தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று தொடங்கிய நிலையில் பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கியதால் கடலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்  பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதேப்போல் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று (02.11.2021)ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகள்  வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கொடைக்கானல் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை  அளித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

top videos

    கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Cuddalore, Govt School, Heavy rain, Heavy Rainfall, Holiday, School, School Leave