இடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 20, 2019, 7:40 AM IST
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. 12 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், விமான நிலையம், பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் என அனைத்து பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லூர், லால்குடி, துவாக்குடி, துறையூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் போல் தேங்கியது.


கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக குருசடி என்ற இடத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தருமபுரி மாவட்டத்தில் அரூர், பொம்மிடி, கடத்தூர், ஒடசல்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. தொடர் மழையால் ஆடிப்பட்டத்தில் ஆவணியில் பயிர் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே உழவு ஓட்டியவர்கள் சோளம், மரவள்ளி, சிறுதானியங்கள், விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இடைவிடாமல் அரை மணி நேரம் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்தது. இந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே விவசாயிகள் விதைப்பணிகளை துவங்கியுள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also watch

First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்