தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

news18
Updated: September 18, 2019, 8:04 AM IST
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கனமழைக்கு வாய்ப்பு
news18
Updated: September 18, 2019, 8:04 AM IST
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.


தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

புதுச்சேரியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதனிடையே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Loading...

அதேபோன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also watch

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...