Home /News /tamil-nadu /

டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

Rain updates | சென்னையை பொறுத்தவரைன்அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி தேதி மற்றும் மாவட்ட வாரியான மழை குறித்த தகவல்கள்: 19.08.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    20.08.2022 முதல் 23.08.2022: வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    Also Read : ஆண் பயணிகள் உஷார்! பஸ்களில் பெண்களை முறைத்து பார்க்க கூடாது - தமிழக அரசின் புதிய விதி

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
    திண்டுக்கல் (திண்டுக்கல்) 10, ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) 9, கொள்ளிடம் (மயிலாடுதுறை) 7, பரங்கிப்பேட்டை (கடலூர்), தொண்டி (ராமநாதபுரம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ராசிபுரம் (நாமக்கல்) தலா 6, கே.எம்.கோயில் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை), காரியாபட்டி (விருதுநகர்) அருப்புக்கோட்டை (விருதுநகர்) தலா 5

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    19.08.2022 மற்றும் 20.08.2022 : தெற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வட ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    21.08.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    22.08.2022, 23.08.2022: இலங்கை கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Heavy rain, Meteorological Center, Tamil Nadu

    அடுத்த செய்தி