தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: September 15, 2019, 7:26 AM IST
  • Share this:
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மல்லவாடி நாயுடுமங்கலம், ஜவ்வாதுமலை, ஆதமங்கலம்புதூர், வீரளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான பழனிசெட்டிபட்டி, கருவேல் நாயக்கன்பட்டி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, ஜக்கம்பட்டி, பிச்சம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள கோபால்பட்டி, சாணார்பட்டி, தாடிக்கொம்பு, வேடசந்தூர், செம்பட்டி, சின்னாளபட்டி உள்பட பல இடங்களில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வரும் நிலையில் மாலை வேளையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. , சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தும் ,ஏரியில் படகு மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர், இதனை தொடர்ந்து இரவு நேரங்களிலும், பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.விருதுநகர் புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சத்திரரெட்டியபட்டி, உசிலம்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் அரை மணி நேரம் கனமழை பெய்தது. திடீரென கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. விவாசாயிகளை இந்த மழை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Also watch

First published: September 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading