தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழை
- News18
- Last Updated: October 27, 2019, 8:39 AM IST
தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வங்கக்கடல் பகுதியில் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். அரபிக்கடலில் கியார் புயல் மையம் கொண்டுள்ளதால், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம். எனினும், கியார் புயலால் தமிழகத்துக்கு நேரடியாக எந்தவித பாதிப்பும் இல்லை என்று புவியரசன் தெரிவித்தார்
மேலும் தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Loading...