Tamil Nadu Rains LIVE Updates: 13-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Rains Red Alert: வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை  நிலவரம் , பாதிப்புகள், நடவடிக்கைகள் குறித்த செய்திகளை இங்கு அறியலாம். 

  • News18 Tamil
  • | November 11, 2021, 15:03 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 20 DAYS AGO

    AUTO-REFRESH

    14:27 (IST)

    13-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    13:49 (IST)
    மரம் விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
    13:28 (IST)

    காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர தமிழக கடற்கரை பகுதியில் சென்னை அருகே கடந்து செல்லும். இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் காற்று 40-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். -  வானிலை மையம்

    13:27 (IST)

    மழை குறித்த முன்னறிவிப்பு பொருத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக மழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    12:38 (IST)

    சென்னையில், கன மழையிலும், வெள்ளத்திலும், ஆங்காங்கே சீரமைக்கும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்....

    12:29 (IST)

    கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 12) விடுமுறை அறிவிப்பு

    12:24 (IST)

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் அறிவுறுத்தல்

    12:15 (IST)

    புதுச்சேரி: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

    12:11 (IST)

    சென்னை கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் தண்ணீர் புகுந்தது...

    12:8 (IST)
    Tamil Nadu Rains LIVE Updates: வானிலை அறிக்கை – தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட இந்தியாவின் முக்கியப் பகுதிகளின் மழை  நிலவரம் (Weather Update in Tamil) குறித்த செய்திகளை இங்கு அறியலாம்.  வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் (Chennai Weather) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ளத்தில் தவிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இங்கு அறியலாம். சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) வழங்கும் வானிலை முன்னறிவிப்பை (Weather Forecast) உடனுக்குடன் இங்கு அறிந்துக் கொள்ளலாம்.