மதுராந்தகம் ஏரி நிரம்பியது - கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரி நிரம்பியது - கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரி

Madurantakam Lake | செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்புள்ளது. இதனால், அங்கு உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 • Share this:
  நிவர் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று தினங்களாக பெய்த மழையின்  காரணமாக மதுராந்தகம்  ஏரியின் முழு கொள்ளளவான  23.3 கன அடி தண்ணீர் நிரம்பியது. இதனால் கலங்கல் வழியாக மட்டுமே தண்ணீர் வெளியேறி வருகிறது.  மேலும் கிளி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கிராமங்களான தோட்ட நாவலூர், விழுதமங்கலம், கச்சேரி , வளவரை , கே கே புதூர் , இருசம நல்லூர், வீராண குன்னம் , போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளார். மேலும்,  கிராம மக்கள் ஆற்றை நடந்து சென்று கடக்கவோ,  அந்த பகுதிகளில் மாடுகளை மேய்க்க கூடாதென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  நீர்வரத்து பகுதிகளில் தற்போது மழை இல்லாததால்  குறைவான நீரே ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.  இதனால் ஷட்டரை திறக்க வாய்ப்பில்லை. ஏரியின் பரப்பு 2853 ஏக்கர் ஆகும். 20 க்கும் மேற்பட்ட  கிராமங்கள் பாசன வசதி பெறும்.  ஏரியின் கொள்ளளவு 694 மில்லியன் கனஅடி.  தற்போது சில மதகுகள் வழியாக உபரி நீர் செல்கிறது.

  கடந்த ஆண்டு ஏரியில் நீர் நிரம்பாத நிலையில்  தற்போது  முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

   

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Yuvaraj V
  First published: