முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Rain Update: அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மழை - வானிலை மையம் எச்சரிக்கை

Rain Update: அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மழை - வானிலை மையம் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், கேரளா, கர்நாடக, கோவா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று முதல் 15ம் தேதிவரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

வடக்கு வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வடக்கு வங்ககடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி  நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி,தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மேலும் படிக்க.. கொரோனா தடுப்பூசியால் அயர்ன் மேன் ஆகிவிட்டேன்: அதிர்ச்சி காட்டும் முதியவர்..

நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய

( நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், கேரளா, கர்நாடக, கோவா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று முதல் 15ம் தேதிவரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Bay of Bengal, Heavy rain, Weather News in Tamil