வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 11000 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள், சென்னையில் 690 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைமத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும், நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழகத்தில் தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 11276.62 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 690.07 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4,227 மழை நீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நெடுஞ்சாலைத் துறையால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 677 பாலங்கள், சிறு பாலங்கள் அடியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
Also Read : தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! - வானிலை மையம்
மேலும் பொதுப்பணித்துறையின் நீர்நிலைகளில் 6,618 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, 18,626 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்து. மின்துறையின் சார்பாக 1.12 லட்சம் மின் கம்பங்களும், 25000 கிலோமீட்டர் நீளம் கொண்ட மின் கடத்திகள் மற்றும் 800 மின் மாற்றிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க 21 ஆயிரத்து உயர் VHF கருவிகளும், 600 செயற்கைக்கோள் தொலைபேசிகளும், 296 நேவிகேசன் உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வருவாய்த்துறை, சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகட்டுப்பாட்டு மையமும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1070 மற்றும் 1077 என்று இலவச தொலைபேசி எண்ணும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் வசதியும் செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.