ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வெளுத்து வாங்கப்போகுது கனமழை..! டெல்டா மாவட்ட மக்களே உஷார்..

வெளுத்து வாங்கப்போகுது கனமழை..! டெல்டா மாவட்ட மக்களே உஷார்..

மழை

மழை

Weather update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Tamil Nadu

நாளை காற்றழுத்த தாழ்மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காற்றழுத்த தாழ்மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழை:

நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :  

நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Delta Farmers, Heavy rain, Heavy Rainfall, Weather News in Tamil