தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை அலர்ட்... எந்த மாவட்டங்களுக்கு?

மாதிரிப்படம்

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ,இன்று முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை கனமழையும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ,இன்று முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை கனமழையும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,

  02.09.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

  03.09.2021: நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

  04.09.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
  கிருஷ்ணகிரி 13, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 12, புதுக்கோட்டை, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) தலா 8, செய்யார் (திருவண்ணாமலை) 7, வட்டணம் (ராமநாதபுரம்), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) தலா 6, செங்கம் (திருவண்ணாமலை) 5, அவலூர்பேட்டை (விழுப்புரம்) 4, பொண்ணை அணை (வேலூர்), திருப்பத்தூர், கோவிலான்குளம் (விருதுநகர்), காரைக்குடி (சிவகங்கை), ஓமலூர் (சேலம்) தலா 3, கலவை (ராணிப்பேட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்), உசிலம்பட்டி (மதுரை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஹரூர் (தர்மபுரி), எமரால்டு (நீலகிரி), திருச்சிராப்பள்ளி விமான நிலையம் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.

  மீனவர்களுக்கான எச்சரிக்கை:

  அரபிக்கடல் பகுதிகள்: 04.09.2021, 05.09.2021: கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  02.09.2021 முதல் 06.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: