தொடர் மழை...இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை..?

குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 14க்கும் அதிகமான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர் மழை...இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை..?
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 3, 2019, 8:06 AM IST
  • Share this:
கனமழை காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர்,  புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர், வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சூழ்நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று அறிவிக்க்பட்டுள்ளது.


தென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 14க்கும் அதிகமான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

 
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading