Home /News /tamil-nadu /

தொடர் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை...?

தொடர் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை...?

TamilNadu Rains |

TamilNadu Rains |

TamilNadu Rains |

  • News18
  • Last Updated :
    கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02-12-19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நீலகிரியில், குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

    தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் திருச்சி உள்ளிட்ட 4 வளாகங்களில் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னையில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த மின்வாரிய கேங்மேன் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    Also See..
    Published by:Sankar
    First published:

    Tags: Heavy rain, Weather Update

    அடுத்த செய்தி