தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. எனினும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நள்ளிரவு முதல் சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்தது. காலை வரை மழை நீடித்து பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் வில்லியனூர், அரியாங்குப்பம், திருவாண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
வேலூர், திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம், நெல்லை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.