சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை - மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை - மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: September 19, 2019, 7:19 AM IST
  • Share this:
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்துவரும் நிலையில், தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் வடபழனி, சாலி கிராமம், கே.கே.நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. வியாசர்பாடி, பெரம்பூர், திருவிக நகர், அயனாவரத்திலும் மழை பெய்தது. அம்பத்தூர், ஆவடி பகுதிகளிலும் இரவில் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது.

சென்னை திருவெற்றியூர் எண்ணூர் சத்தியமூர்த்தி நகர் மணலி ஆகிய இடங்களில் பலத்த மழை ராயபுரம் காசிமேடு, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, தங்கசாலை, வியாசர்பாடி, பெரம்பூர்,திருவிக நகர், அயனாவரம், மாதவரம், பால் பண்ணை, மணலி, ஓட்டேரி, சூலை ஆகிய ஒரு சில இடங்களில் பலத்த மழை சில இடத்தில் லேசான மழை பெய்தது.


தமிழகம், புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி, தஞ்சை உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழக கடற்கரையோரங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading