அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் செயற்குழு-பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீர்மானக்குழு தயார் செய்த வரைவு தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர். இதேபோல் கட்சியின் வரவு செலவு அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பொதுக்குழுவிலும் கட்சியின் ஆண்டு வரவு செலவு கணக்கை பொருளாளர் வாசிப்பார். அதன் அடிப்படையில் வரவு செலவு கணக்கு குறித்த தகவல்கள் ஓபிஎஸ்-க்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நாளை நடைபெறும் செயற்குழு - பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
ஒற்றைத் தலைமை தொடர்பாக கட்சிக்குள் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்படும் நிலையில், நாளை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi palanisamy, O Panneerselvam, OPS, OPS - EPS, Tamil News