”சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழத் தயார்”- Trans Bill மசோதாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

திருநங்கைகளுக்கான பாதுகாப்பு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

”சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழத் தயார்”- Trans Bill மசோதாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்
திருநங்கைகளுக்கான பாதுகாப்பு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
  • Share this:
திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பான திருத்தப்பட்டச் சட்டம் கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஒட்டுமொத்த திருநங்கைகள் சமூகமும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி எம்.பி. சிவா நாடாளுமன்ற மக்களைவையில் ’திருநங்கைகளுக்கான பாதுகாப்பு’ மசோதாவை தனி நபர் மசோதாவாக அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா மீது தற்போது 27 திருத்தங்களை மேற்கொண்டு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்த மசோதாவில் திருநங்கைகளை அடையாளப்படுத்திய விதத்துக்கும் பாதுகாப்புச் சட்ட மசோதா என்ற பெயரில் திருநங்கைகளுக்கான வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர் திருநங்கைகள் சமூகத்தினர்.

சட்ட மசோதாவின் அடிப்படையில் திருநங்கை என்பதற்கான விரிவாக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ”பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் இருப்பவர் திருநங்கை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ’திருநங்கை’ என்பதற்கான அர்த்தம். ”திருநங்கைகளுக்கானப் பாதுகாப்பு மசோதா என்பது திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே தவிர அவர்களைக் கொல்வதற்கானது அல்ல” என்கிறார் திருநங்கை சமூக செயற்பாட்டாளரான கிரேஸ் பானு.


செயற்பாட்டாளர் கிரேஸ் பானு


திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா குறித்து நம்முடன் விரிவாகப் பேசிய கிரேஸ் பானு, “திருநங்கை என அடையாளப்படுத்துவதற்காக அவர்கள் கொடுத்துள்ள விளக்கமே முதலில் தவறு. திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் தெளிவாகவே உள்ளது. ஆனால், அரசுக்கு ஏன் இந்தக் குழப்பம்? எங்களை இப்படித்தான் அடையாளப்படுத்த வேண்டும் என ஒரு அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது? திருநங்கைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பும் மத்திய அரசு கண்டிப்பாக எங்கள் சமூகத்துடன் கலந்து பேசியிருக்க வேண்டும்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக திருநங்கைகள், திருநம்பிகளுக்கான உரிமையைப் பாதுகாக்கக் கோரும் சமூக மக்கள்
ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்யத் திட்டமிட்டது போல் உள்ளது இந்த மசோதா. 2016 மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஸ்டாண்டிங் கமிட்டியிடம் எங்கள் சமூக மக்கள் விரிவாகவே பேசியுள்ளோம். ஆனாலும், தற்போதைய மசோதாவில் எங்கள் சமூகத்துக்கு எந்தவொரு பயனும் இல்லை. இது சொந்த நாட்டிலேயே எங்களை அகதிகள் ஆக்குவதற்கான வேலை. மத்திய அரசு கொடுத்த அடையாளத்தால் நாங்கள் அடையாளங்களைத் தொலைத்து அகதிகளாகவும் வாழத் தயார்.

இந்த மசோதாவில் சொல்லப்பட்டது போல், திருநங்கைகள் யாரும் பாலியல் தொழிலில் ஈடுபடக்கூடாது, பிச்சை எடுக்கக்கூடாது என்றும், மீறினால் இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எங்கள் சமூகம் அடையாளமும் உரிமையும் கிடைக்காமல் தவிக்கும் போது அதற்கான மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல் ஒரே இரவில் இப்படியொரு சட்டம் நிறைவேற்றுவது சரியில்லை. மேலும் புதிதாகத் தன்னை திருநங்கை என அடையாளம் காணும் ஒருவருக்கு மூத்தத் திருநங்கைகள் ஆதரவு அளிக்கக்கூடாது என்கின்றனர். முறையாக சட்டப்படி நீதிமன்றத்தில் மனு அளித்து நீதிபதி மாவட்ட ஆட்சியரிடம் இவர் ஒரு திருநங்கை என்பதற்கான அடையாளத்தை அளித்த பின் தான் இந்த சமூகத்தில் நாங்கள் எங்களைத் திருநங்கைகளாக அடையாளப்படுத்த முடியும் என்கிறது சட்டம். எங்களுக்கான அடையாளத்துக்கு மீண்டும் நாங்கள் போராடத்தான் வேண்டும். அதுவரையில் சமூக அகதிகளாக மட்டுமே நாங்கள் வாழ வேண்டுமா?” என வேதனைத் தெரிவிக்கிறார் கிரேஸ் பானு.

பாதுகாப்பு மசோதா திருநங்கைகளுக்கான அடையாளத்தைக் ”குற்றவாளிகள்” என்ற பிரிவின் கீழ் வைத்துள்ளதாக இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருவது கவனிக்கத்தக்கது.

மேலும் பார்க்க: 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பரிசீலனை- பிரதமர் மோடி
First published: December 19, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading