• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மின்தடை விவகாரம் - சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தங்கமணி காரசார விவாதம்

மின்தடை விவகாரம் - சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தங்கமணி காரசார விவாதம்

செந்தில் பாலாஜி, தங்கமணி

செந்தில் பாலாஜி, தங்கமணி

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மின்தடை விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க எம்.எல்.ஏ தங்கமணி இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

  • Share this:
    மின் தடை ஒன்பது மாதங்களாக இல்லை. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலமாக தான் மின்தடை இருக்கிறது என்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் எழுப்பினார். அதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு இல்லாத காரணமாக மின் தடை இருந்து வந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருப்பதாக மக்கள் கூறியிருந்தனர். அதற்காக மூன்று வகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 11,40,000 பேர் திருத்திய மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 5,40,000 முறை மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் கோளாறின் காரணமாக 10,000 முறை மின் தடை ஏற்பட்டிருக்கிறது.

    தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என அ.தி.மு.க அரசு கூறிய நிலையில், மின் இணைப்புக்காக காத்திருக்கும் 2,41,000 பேருக்கு ஏன் மின் இணைப்பு வழங்கப்படவில்லை? அ.தி.மு.க அரசு ஆட்சியின் காரணமாக, மின் வாரியத்திற்கு 1,59,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்கு வருடத்திற்கு 13% விகிதத்தில் 13 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்தியுள்ளனர். தி.மு.க பொறுப்பேற்றதும் வட்டி செலுத்துவதில் 2,000 கோடி ரூபாய் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின் பராமரிப்பு செய்யப்படாததால் மின் வெட்டு ஏற்படுகிறது. 10 நாட்களுக்குள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழும். ஒரு யூனிட் 7 ரூபாய் என வருடத்திற்கு 4,300 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திடம் அ.தி.மு.க அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது. இது சீர்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ‘எந்த மாநிலத்திலும் முழுமையாக மின்சார உற்பத்தி செய்யப்படவில்லை. வெளியிலிருந்து வணிகம் செய்து தான் நிர்வகிக்கப்படுகிறது. அமைச்சர் அ.தி.மு.கவில் இருந்தபோது இந்த துறையை பெருமையாகப் பேசினார். இன்று அவர் கட்சி மாறியதும் தற்போது எப்படி பேசுகிறார் என்பதை அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும்’ என்று தங்கமணி தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: