Home /News /tamil-nadu /

ஒரிரு நாட்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்... லேசான மழைக்கும் வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஒரிரு நாட்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்... லேசான மழைக்கும் வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோப்பு படம்

கோப்பு படம்

உள் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உள் தமிழக மாவட்டங்களில் 2 டிகிரி முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கடந்த 3 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது, இந்நிலையில்
இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும் .

மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதிகளில் 1செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,அதிகபட்ச வெப்ப நிலையாக 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Summer, Weather Update

அடுத்த செய்தி