Home /News /tamil-nadu /

வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Youtube Video

சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் வேலூரில் 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மதுரை மற்றும் கடலூரில் தலா 41.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பதிவாகியுள்ளது.

    வடதமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்தரி வெயில், வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துச் சென்ற உம்பன் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ள பாலச்சந்திரன், பொதுமக்கள் காலை11 மணி முதல் மதியம் மூன்று முப்பது வரை காரணமின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தினார்.

    இந்நிலையில், தமிழகத்திலேயே சென்னை மீனம்பாக்கம் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக தலா 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் வேலூரில் 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மதுரை மற்றும் கடலூரில் தலா 41.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பதிவாகியுள்ளது.

    மன்னார் வளைகுடா பகுதியில், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், அதே போல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் துறைமுக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டது கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather Forecast

    அடுத்த செய்தி