• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெய்பீம் படத்திற்கு பெருகும் ஆதரவு... சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு

ஜெய்பீம் படத்திற்கு பெருகும் ஆதரவு... சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு

ஜெய்பீம்

ஜெய்பீம்

ஜெய்பீம் படத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வரும் ட்விட்டரில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சியான கருத்தை பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. ஒதுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் சூர்யா அவர்களுக்கு நீதி பெற்று தருவதே இந்த படத்தின் கதை. ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த பலர் சூர்யாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவத்து வந்தனர்.
    இதனிடையே இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.

    ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் அடையாளத்தை தவறாக காட்டியது ஏன் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அன்புமணியின் கடிதத்திற்கு நடிகர் சூர்யாவும் பதில் அளித்து அதற்கான விளக்கத்தையும் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    அதில் வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும் 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

    ஜெய்பீம் படத்திற்கு தொடர்ந்து சிக்கல். பிரச்னைகள் வந்து கொண்டிருந்த போதும் இணையத்தில் இந்த படத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். சூர்யா ரசிகர்கள் #WeStandwithSurya என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் செய்து வந்தனர்.



    இந்நிலையில் ட்விட்டரில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அன்பானவர்களே... ஜெய்பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் பார்ததில்லை. நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: