அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்வைத்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
ஒற்றைத் தலைமைக்கு வர கே.பி.முனுசாமி முயற்சி என பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சி சார்பில் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டறியப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 103.7 அடியாக இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழக ஆளுங்கட்சி சகோதரர்களுக்கு வேலை இல்லை என்றால் தமிழக ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் காவல் ஆய்வாளர் மற்றும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக பல கோடிகளை சுருட்டிய எல்.எஸ் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் மீது நூற்றுக் கணக்கானவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
நயன்தாராவின் 75 ஆவது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்துப் பள்ளிகளையும் வரும் 24-ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அடுத்த மாதத்தில் மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
புதிய நாடாளுமன்றத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள நான்கு சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்துவருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிக்க இருப்பதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
உலகின் எந்தப் பகுதியிலும் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் சூழலில் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
சிறப்பு விமானப்படை விமானம் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்ச, இன்று அதிகாலை மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய தாய்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நடைபெற்றது. ஏராளமான பொது மக்கள் திரண்டு அபே-வுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஆப்கானிஸ்தான் காவல்துறைக்கு தாலிபான்கள் புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட நிலையில் மேலும் 5 புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Headlines, Today news, Top News