தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும், இதனால் பொதுமக்களிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பழக்கமும் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், ஜனவரியில் உச்சத்தை அடைந்து, அதிகரித்த கொரோனா, தற்போது குறைந்து கொண்டே வந்தாலும், முகவசம் அணிவதை நிறுத்த கூடாது.
மக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எச்சரித்த சுகாதாரத்துறை செயலர், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், ராணிபேட்டை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் சதவீதம் 10 விழுக்காடாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து இருந்தாலும், கேரள எல்லையான கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில், ஆந்திரா எல்லையான திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சுற்றுலா தளம் உள்ள மாவட்டங்களான நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 3% பேர் சாதாரண படுக்கைகள், 6% பேர் ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியு படுக்கையில் 8% விழுக்காட்டினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
மொத்தமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களில் 4% விழுக்காடு மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதை குறைக்க தொடங்கி உள்ளதாகவும், மாஸ்க் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பொதுமக்கள் அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது என்றார்.
கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை காத்து கொள்ள கட்டாயம் முககவசம் அணிந்து தங்களுடைய ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஜனவரியில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் 7.5 லட்சம் பேரில் தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தமிழகத்தில் பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று காலத்தில் புற்றுநோய் போன்ற இதர நோய்களை பொதுமக்கள் மறந்து விடக்கூடாது என்றும், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறிய ராதாகிருஷ்ணன், இதில் 2012ம் ஆண்டு 53,022 பேருக்கு புற்று நோய் பாதித்தது, இந்நிலை 2021ம் ஆண்டு 81,814 ஆக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு அதிகமாக கர்பப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோய் அதிகமாக உள்ளது.
இதனால் ஆரம்ப காலத்தில் சிகிச்சைக்கு வந்தால் 75% வரை குணப்படுத்த முடியும் எனவும், கவரப்பேட்டையில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.200 கோடி மதிப்பில் ஒப்புயிர் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் கூறினார். இதனால் தொற்றா நோய் குறித்த தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
5 லட்சம் கடனுக்கு 17 லட்சம் வட்டி - கந்துவட்டி கொடுமையால் நிதிநிறுவன மேலாளர் தற்கொலை
48 மணி நேரத்தில் 13,268 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக 12.61 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர்.
இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 1.06 கோடி பேர் உள்ளது வேதனை அளிக்கிறது. இதனால், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Radhakrishnan