தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடரும் - சுகாதாரத்துறைச் செயலர் விளக்கம்

பிளாஸ்மா சிகிச்சை திருப்திகரமான பலன் கொடுக்கவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் ஆய்வறிக்கையில் கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடரும், அதனால் பலன் உள்ளது என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடரும் - சுகாதாரத்துறைச் செயலர் விளக்கம்
ராதாகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: September 10, 2020, 3:47 PM IST
  • Share this:
கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்கள் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா எனப்படும் ஊநீர் தானமாக பெற்று, அதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை அடிப்படையில் சிகிச்சை தரப்படுகிறது.

பிளாஸ்மா தானம் கொடுக்க மக்கள் முன்வர வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2.3 கோடி ரூபாய் செலவில் பிரத்யேக பிளாஸ்மா வங்கி உருவாக்கப்பட்டு 150 பேர் இதுவரை தானமளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 14 வரையில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்மா சிகிச்சை திருப்திகரமான முடிவுகள் வரவில்லை என்று தெரிவித்தது.


பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதால் கொரோனா நோயாளிகளை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்றோ, லேசான அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளை தீவிர பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்றோ உறுதி அளிக்க முடியவில்லை என்று அந்த அறிக்கை கூறியது.

Also read... வீடு தேடி வரும் வங்கி சேவை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணன்: பிளாஸ்மா சிகிச்சையினால் பலன் இல்லை என்பது எதிர்பார்த்ததே. அமெரிக்காவில் 35ஆயிரம் நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த முடிவுதான் வந்தது.  பிளாஸ்மா சிகிச்சை பெற்று குணமானவர்கள் வேறு காரணங்களினால் குணமாகியிருக்கலாம். தேவை இல்லாமல் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் மருத்துவமனைகளில் பிளாஸ்மா வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார் தொற்று நோய் மருத்துவர் ராம் கோபால கிருஷ்ணன்.மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஆய்வில், நோய் பாதிப்பில் எந்த கட்டத்தில் உள்ள நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் தருகிறது என்பது தெளிவாக இல்லை.  கடைசிக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலனளிப்பதில்லை என்பது கள அனுபவத்தில் அறிந்துகொண்டது. அதே சமயம் தொற்று ஏற்பட்டு முதல் நான்கு நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தந்தால் அது நல்ல பலன்களை தருகிறது. எனவே பிளாஸ்மா சிகிச்சை முற்றிலும் பலனளிக்கவே இல்லை என்று புறந்தள்ளி விட முடியாது என்கிறார் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் : ஏதோ சில ஆய்வு கட்டுரைகளை நம்பி எந்த முடிவும் எடுக்க முடியாது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் பலர் இதுவரை தமிழகத்தில் குணமாகியுள்ளனர். இந்த பரிசோதனை தொடர்வதற்கான அனுமதியை ஐ.சி.எம்.ஆர் வழங்கியிருக்கிறது. எனவே தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading