தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவுவதால், பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 372 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று ராதாகிருஷ்ணன் அப்போது தெரிவித்தார்.
Must read: கொரோனா மீட்பில் உலக அளவில் இந்தியா முதல் இடம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
டெங்கு கொசுக்கள் நன்னீரில் வளரும் தம்மை கொண்டவை என்பதால், மக்கள் தங்களின் வீடுகளிலும், சுற்றுப் புறங்களிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக நீர்தேக்கத் தொட்டிகளை நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.