முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் - சிக்கலில் சுகாதாரத்துறைச் செயலாளர்

ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் - சிக்கலில் சுகாதாரத்துறைச் செயலாளர்

வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றால், இந்திய மருத்துவர்களின் பெயர் பாதிக்கப்படும் என்று கூறி மறுத்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சுமந்தியிருந்தநிலையில், ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலைக் குறைபாடு காரணமாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சி.வி.சண்முகம்

சுமார் 14 மாதங்களாக விசாரணை நடைபெற்று வரும் சூழலில் ஜெயலலிதாவுக்கு நடைபெற்ற சிகிச்சைக் குறித்து சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், ‘மேல்கட்ட சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று மருத்துவமனை தரப்பு உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.

ஆனால், சுகாதாரத்துறை செயலாளர், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றால், இந்திய மருத்துவர்களின் பெயர் பாதிக்கப்படும் என்று கூறி மறுத்துவிட்டார். ராதாகிருஷ்ணனின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்’ என்று கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

அவருடைய கருத்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு அ.தி.மு.க தரப்பிருந்தோ, ராதா கிருஷ்ணன் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்தநிலையில், சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்துக்குச் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published:

Tags: Jayalalithaa Dead