Home /News /tamil-nadu /

பள்ளி, கல்லூரிகளின் நேரடி வகுப்புகளுக்கு கட்டுப்பாடா? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

பள்ளி, கல்லூரிகளின் நேரடி வகுப்புகளுக்கு கட்டுப்பாடா? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ஆகியவற்றிற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து நாளை தமிழக முதல்வருடன் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனோ மற்றும் ஒமைக்ரான் பரவலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் கொரோனோ பரவல் அதிகரித்து வருகிறது. அதனை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்தபகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    வரக்கூடிய நாட்களில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு உடன் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடு மற்றும் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாளை தமிழக முதலமைச்சர் உடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    புத்தாண்டு தினத்தையொட்டி கூட்டம் கூடுவதை தவிர்க்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறை ஆகியோர் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் எச்சரித்தார். சென்னை மாநகரில் கொரோனா பரிசோதனை 25 ஆயிரம் என்ற அளவிற்கு பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    கல்லூரி வளாகங்களில் அதிகளவு தொற்றுப் பரவலைத் தடுக்க மாணவர்கள் அதிக அளவு ஒன்று கூடுவதை தவிர்க்க கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதை நிர்வாகங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Omicron, School

    அடுத்த செய்தி