கொரோனா பரிசோதனைகளை குறைக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!

கொரோனா பரிசோதனைகளை குறைக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

பண்டிகை காலத்துக்கு முன் என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவோ அதே போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கொரோனாவுக்கு ஏற்படுத்தப்பட்ட ஐ சி யு , ஆக்சிஜன் ப்டுக்கை வசதிகளையும் குறைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவதால் பரிசோதனைகளை குறைக்கக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மற்றும் சென்னையில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற புதிய தொற்று குவியல்களை தவிர்க்க பரிசோதனைகளை குறைக்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் அதே போன்று பரிசோதனைகளும் குறைந்து வருகின்றன. ஏனென்றால் காய்ச்சல் முகாம்களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பண்டிகை, விடுமுறை, மழைக்காலம் என்று காரணம் கூறினாலும் அடுத்த வரும் நாட்கள் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விழாக்களில் பங்கேற்றதால் ஏற்படும் தொற்று குவியல், ஒரே தெருவில், குடும்பத்தில் ஏற்படும் குவியல், கட்டுமான இடத்தில் தொற்று குவியல் போன்றவை நமது கவனமாக இருக்க வேண்டும்.

Also read... வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் செய்வதற்கான தேர்வு - நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடிபண்டிகை காலத்துக்கு முந்தைய காலம் போல பரிசோதனைகளை அதிகரிக்காவிட்டால் இது போன்ற கொத்துக் கொத்தாக தொற்றுகளை  தவறவிடலாம். எனவே அடுத்த 14 முதல் 28 நாட்கள் மிக முக்கியமாகும். வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலம் புதிய தொற்றுக‌ள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பொது இடங்களில் முக கவசம் அணிவது மிக குறைவாக உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று எண்ணிக்கை குறைந்ததால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படக் கூடாது. அதற்கு டெல்லியே முக்கிய உதாரணமாகும்.

எனவே பண்டிகை காலத்துக்கு முன் என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவோ அதே போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கொரோனாவுக்கு ஏற்படுத்தப்பட்ட ஐ சி யு , ஆக்சிஜன் ப்டுக்கை வசதிகளையும் குறைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: