• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இதுவரை 225 பேர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை 225 பேர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜய பாஸ்கர் (கோப்புப்படம்)

அமைச்சர் விஜய பாஸ்கர் (கோப்புப்படம்)

தமிழகத்தில் இதுவரை 225 பேர் பிளாஸ்மா தானம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தீயணைப்பு வீரர்கள் 29 பேர் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் தானாக முன்வந்து பிளாஸ்மா தானம் வழங்கினர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நோயாளிகளின் உயிர் காக்கும் வகையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மா தானம் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் தீ மீட்பு பணி துறை வட மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



Also read... கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 118 அவசர ஊர்திகள் - தொடங்கிவைத்த முதல்வர்

அப்போது அவர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை தமிழகத்தில் 225 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களிலும் பிளாஸ்மா தானம் மற்றும் சிகிச்சை காண ஏற்பாடுகள் விரைவுபடுத்தி  வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அனைத்து மாவட்டங்களின் சிகிச்சை பெற முதல்வர் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பிளாஸ்மா தானம் தரும் தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: