நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

தேசிய மருத்துவ கழக மசோதாவை நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்க்கும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!
அமைச்சர் விஜயபாஸ்கர்
  • News18
  • Last Updated: July 19, 2019, 3:57 PM IST
  • Share this:
நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை ஏற்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டில், 'நேஷனல் எக்சிட் டெஸ்ட்' எனப்படும், 'நெக்ஸ்ட்' தேர்வு எழுத வேண்டும் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  இதற்கான புதிய மசோதாவுக்கு, நேற்று முன் தினம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,


தேசிய மருத்துவ கழக மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அந்த மசோதா, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதால், அதனை அதிமுக எதிர்க்க வேண்டும்'' எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‛தேசிய மருத்துவ கழக மசோதாவை, 2016-ம் ஆண்டிலேயே நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சித்தது என்றும், தற்போது மீண்டும் கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்த மசோதா தமிழகத்தின் உரிமையை பறிக்கும் என்பதால், அதனை ஏற்க முடியாது என ஏற்கெனவே மத்திய அரசிடம் தெரிவித்து இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Loading...

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து இங்கே வரும் மாணவர்களுக்கு வேண்டுமானால் இந்த தேர்வை நடத்தலாம் எனக்கூறிய அமைச்சர், தமிழகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை நடத்தக்கூடாது என்றும் அதை நாம் ஏற்கவும் மாட்டோம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் எனவும், எதிர்த்து குரல் கொடுப்பார்கள் எனவும் உறுதி அளித்தார்.

Also see...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...