கொரோனா பாசிடிவ் வந்தால் பயம் வேண்டாம் - அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்

புதிதாக 10 லட்சம் டெஸ்ட் கிட் வாங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

புதிதாக 10 லட்சம் டெஸ்ட் கிட் வாங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

  • Share this:
தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வகைப்படுத்துதல் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

வகைப்படுத்துதல் மையம் மட்டுமின்றி 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையும் இங்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு செல்லும் நிலை மாறி அதற்கு இடையில் தாம்பரத்தில் இந்த மருத்துவமனை தயாராகி வருகிறது.

இதுவரை 52,926 பேரை குணப்படுத்தியுள்ளோம். அதனால் பாசிடிவ் வந்தால் யாரும் பயப்பட வேண்டாம்.  ஆரம்ப நிலையிலேயே தொற்றை கண்டறித்து சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதற்கு அடுத்து கிண்டி கிங்ஸ் நிறுவனத்தில் தயாராகி வரும் சி.டி.ஸ்கேன் வசதியோடு 700 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என முதலமைச்சர் தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறார். புதிதாக 10 லட்சம் டெஸ்ட் கிட் வாங்க நேற்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அதனால் டெஸ்ட் கிட் குறைவாக இருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.

நாடு முழுவதும் டெஸ்ட் கிட் வாங்க மத்திய அரசின் நிதியை தான் மாநில அரசுகள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகம் மட்டும்தான் டெஸ்ட் கிட் வாங்க 90 சதவிகிதம் மாநில நிதியை பயன்படுத்துகிறது. அதேபோல் 6 CT ஸ்கேன் இயந்திரம் வாங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

 

கொரோனா பாசிடிவ் ஆனவர்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம், பயப்பட வேண்டாம். அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவ முகாம்களுக்கு வந்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரையும் குணப்படுத்த அரசு அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறது.

Also see... நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்: இறந்து ஒன்றரை நாளுக்கு பின் கண்டுபிடிப்பு..

பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக பயன் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  13 நபர்கள் மதுரையிலும் 1 நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர். குணமடைந்த நபர்கள் பிளாஸ்மா வழங்க முன்வர வேண்டும்.

எந்த விமர்சனமுமின்றி முதலமைச்சர் கூறியபடி அனைத்து குடும்ப அட்டைதார உறுப்பினர்களுக்கும் இரண்டு மாஸ்க் வீதம் விரைவில் வழங்கப்படும்", என தெரித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: