ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் XBB வகை கொரோனாதான் உறுதியாகி வருகிறது : மா.சுப்பிரமணியம் விளக்கம்!

தமிழகத்தில் XBB வகை கொரோனாதான் உறுதியாகி வருகிறது : மா.சுப்பிரமணியம் விளக்கம்!

சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

XBB variant | தமிழகத்தில் கொரோன சிகிச்சைக்கக மருந்துகள் போதியளவு கையிருப்பில் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் தமிழகத்தில் XBB வகை கொரோனா தான் உறுதியாகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விமான பயணிகளுக்கான கொரோனா பரிசோதனைகள் தொடங்கியுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தினமும் 10க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதாகவும், தமிழ்நாட்டில் XBB வகை கொரோனா தான் உறுதியாகி வருகிறது என்றார்.

BA5 கொரோனாவின் உள் வகையான BF7 வகை கொரோனா தான் சீனாவில் பாதிப்புகள் அதிகமாக காரணமாக உள்ளது என பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்தடுத்த 2 நாட்கள் வெளுத்துவாங்கும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

மேலும் தமிழகத்தில் கொரோன சிகிச்சைக்கக மருந்துகள் போதியளவு கையிருப்பில் உள்ளது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தல் பேரிலும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Ma subramanian, Omicron BF 7 Variant