ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.. முக்கிய விவரம் சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.. முக்கிய விவரம் சொன்ன அமைச்சர்!

அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் மா..சுப்பிரமணியன்

அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் மா..சுப்பிரமணியன்

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியவேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் 90%சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் மா..சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் முகக்கவசம் அணியவேண்டும் என்கிற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 90% சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருகின்றது என்றும் தமிழக பன்னாட்டு விமானநிலையங்களில் கொரோனா சோதனை துவங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர்,சீனா, சிங்கப்பூர்,

ஜப்பான,ஹாங்காங்,நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டாயம் RT பி. சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பவதாக கூறினார்.  BF5 வகை கொரோனா திரிபு ஏற்கனவே தமிழகத்தில் கண்டறியப்பட்ட ஒன்று, தற்போது உருமாறியுள்ள BF7 குறித்து அச்சப்பட தேவையில்லை.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரூ.1000-க்கு பதிலாக ரூ.2500 அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

 ராஜாஜியின் பேரன் தமிழக முதல்வரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று அவருடைய புகைப்படக் கண்காட்சியை தமிழக அரசு வைத்துள்ளதாக அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார். திமுகவின் கொள்கைகளுக்கு மாறுபட்ட கொள்கை கொண்ட ராஜாஜி அவர்களுக்கு புகைப்பட கண்காட்சியை தமிழக அரசு வைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் தா.மோ அன்பரசன் பதில் அளித்தார்.

First published:

Tags: Ma subramanian