Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி இரு மடங்காக உயர்வு - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி இரு மடங்காக உயர்வு - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

பள்ளிக்கு வராத 15 வயது முதல் 17 வயது வரையிலான மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம் அவர்களின் பட்டியலை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி  எந்த அளவு தயார் நிலையில் உள்ளது?

மே 7ம் தேதிக்கு முன் 220 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் வசதி இருந்தது. தற்போது ஆக்சிஜன் கான்சண்ட் ரேட்டர்,  ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் ஆலைகள் மூலம் 1400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வசதி உள்ளது. கடந்த அலையின் போது  600 மெட்ரிக் டன் அதிகபட்சமாக தேவைப்பட்டது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு கையிருப்பு உள்ளது.

ஒமைக்ரான் மற்றும் எஸ் மரபணு மாற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே உள்ளன. இவர்களுக்கான கொரோனா பராமரிப்பு மையங்கள் புதிதாக உருவாக்கப்படுமா?

கொரோனா பராமரிப்பு மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் கொண்ட பராமரிப்பு மையம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இஞ்சம்பாக்கம் மஞ்சம்பாக்கம் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் credai அமைப்பின் உதவியுடன் சென்னையில் மண்டலத்துக்கு 100 படுக்கைகள் 1500 படுக்கைகள் உருவாக்கப்படவுள்ளன.

Also read... அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வந்தால் போதும் - மத்திய அரசு!

Also read... 34 மாணவர்களுக்கு கொரோனா - அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!

கடந்தமுறை எங்கெல்லாம் கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன அதனை மீண்டும் தொடங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சித்த முறையில் சிகிச்சை வழங்க ஏற்கனவே 79 மையங்கள் இருந்தன தற்போது அவை நூறாக அதிகரிக்கப்பட உள்ளது.

பள்ளிக்கு செல்லாத மாணவர்களுக்கு வீட்டுக்கு சென்று தடுப்பு ஊசி செலுத்தப்படுமா?

பள்ளிக்கு வராத 15 வயது முதல் 17 வயது வரையிலான மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம் அவர்களின் பட்டியலை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ma subramanian

அடுத்த செய்தி