Home /News /tamil-nadu /

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அமைச்சர் மா.சுப்ரமணியன்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

மதுரையில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார், பின்னர் பேசுகையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக கூறினார்.

  • News18
  • Last Updated :
    வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் எலும்பு வங்கியை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக கூறினார். மேலும், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பிற்கு 64,900 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார்.

    19 மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 22076 இடங்களும், சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளன என தெரிவித்தார். தரவரிசை பட்டியல் முடிவுகளை இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 161 பேர் ஒமைக்ரான் கொரோனா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். ஒமைக்ரான் கொரோனா திரிபு இதுவரை 89 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் திரிபால் பிரிட்டன் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு நாளென்றுக்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்தியாவை பொறுத்தவரை 161 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தேவையான மருந்துகளின் விலையை நிலைப்படுத்தும் வகையில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாண்டவியா கூறினார்.

    கேரளா மற்றும் டெல்லியில் புதிய ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்லியில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் மாதிரிகள் அனைத்தும் வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். தற்போது விமான நிலையங்களின் சேகரிக்கப்படும் மாதிரிகள் மட்டுமே வரிசைப்படுத்தலுக்கு அனுப்பட்டு வருகின்றன.

    இதனிடையே ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள விழிப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். ஒமைக்ரான் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றாலும் , முன்னெரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஆபத்தை ஏற்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்

    இந்நிலையில், ஒமைக்ரான் அச்சத்தால் இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. வர்த்தகத்தின் இடையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து 879 புள்ளிகளை இழந்தது, எனினும் சிறிது சுதாரித்து வர்த்தகத்தின் முடிவில் ஆயிரத்து 190 புள்ளிகள் குறைவாக நிலைநின்றது.

    உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு… கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    தொடர்ந்து இரு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 3 புள்ளி 6 சதவிகிதம் சரிவை சந்தித்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 371 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அக்டோபர் 19- ஆம் தேதி 18 ஆயிரத்து 604 என்ற உச்சத்தை அடைந்த நிஃப்டி, இரண்டு மாதங்களில் ஆயிரத்து 990 புள்ளிகளை இழந்துள்ளது.

    Also read... புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் தொடங்கினார்

    பஜாஜ் பைனான்ஸ், ஜேஎஸ்டபுள்யு, டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டர்ஸ், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் கடுமையான வீழ்ச்சி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Ma subramanian, Omicron

    அடுத்த செய்தி