டெங்கு நோய் ஒரு பகுதியில் பரவக் கூடுமா இல்லையா என்பதை முன்கூட்டியே அறிவியல்பூர்வமான உத்திகள் கொண்டு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை கணித்து வருகிறது. ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் 2 ஆயிரம் கொசுக்களை பரிசோதிக்கிறது பொது சுகாதாரத்துறை.
டெங்கு நோய் ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. எனவே ஒரு பகுதியில் உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை பிடித்து அதில் வைரஸ் உள்ளதா என பரிசோதித்து அதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கிறது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த உத்தி தற்போது மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை 700 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 21 நாட்களுக்கு ஒரு முறை கொசு மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் இது நடைமுறையில் இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவிக்கிறார்.
Read More : சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு
பூச்சியியல் நிபுணர் தலைமையிலான குழு களத்திலிருந்து கொசுக்களை பிடிக்க செல்கிறது. ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் குடிநீர் தொட்டிகள், மழை நீர் தேங்கியிருக்கும் இடங்களை வீடு வீடாக தேடி செல்கின்றனர். கருப்பு வெள்ளை நிறங்களில் கால்கள் கொண்ட கொசுக்களை கண்ணால் பார்த்தே கண்டுபிடித்து விடுகின்றனர். பிறகு அந்த கொசுவை ஒரு குழாய் மூலம் வாயால் உறிஞ்சு பிடிக்கின்றனர். இது போன்ற பிடிக்கப்படும் கொசுக்களை குழாயில் அடைத்து தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை ஆய்வகத்துக்கு அனுப்புகின்றனர்.
கொசு மாதிரிகள் எங்கிருந்து வருகின்றன என அடையாள எண் இட்ட பிறகு, ஒரு குப்பியில் ஒரு பகுதியில் இருந்து வரும் கொசுக்களை ஒன்றாக இயந்திரத்தின் உதவியுடன் திரவம் கலந்து அரைக்கின்றனர்.அரைத்த அந்த திரவத்தை centrifuge எனப்படும் மற்றொரு நடைமுறை மூலம் கழிவுகள் தனியாகவும் வைரஸ் இருக்கக் கூடிய திரவம் தனியாகவும் பிரிக்கப்படுகிறது.
பிறகு அந்த திரவத்தின் சில துளிகள் RTPCR பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் வைரஸ் உள்ளதா இல்லையா என தெரிய வருகிறது. வைரஸ் இருகிறது என தெரிந்தால் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.