தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனோ: ஆக்சிஜன் வசதி கொண்ட 6 ஆயிரம் படுக்கைகளை அமைக்க சுகாதாரத்துறை முடிவு

மாதிரிப்படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வசதி கொண்ட 6 ஆயிரம் படுக்கைகளை அமைக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. 

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வசதி கொண்ட 6 ஆயிரம் படுக்கைகளை அமைக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுவரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 817 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையுடன் கூடுதலாக 550 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 750 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள 200 படுக்கைகளுடன் கூடுதலாக 100 படுக்கைகளும், கிண்டி கொரோனா தடுப்பு மருத்துவமனையில் தற்போது உள்ள 525 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையுடன் கூடுதலாக 200 படுக்கைகளும் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

  ஆக்சிஜன் வசதி இல்லாத கே.கே.நகர், அண்ணா நகர், பெரியார் நகர், மருத்துவமனைகளில் தலா 150 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னைக்கு, கூடுதலாக 2 ஆயிரத்து 400 ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் கிடைக்கும்.

  சென்னை தவிர்த்து தமிழத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தற்போது 10 ஆயிரத்து 603 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட படுக்கை வசதி உள்ள நிலையில் கூடுதலாக மூன்றாயிரத்து 645 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கபட உள்ளன.

  தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் என மொத்தம் 51 ஆயிரத்து 205 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 21 ஆயிரத்து 79 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  Published by:Esakki Raja
  First published: