Home /News /tamil-nadu /

இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 4, 2022)

இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 4, 2022)

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

Today Headlines : இன்றைய (January 4, 2022) முக்கியச் செய்திகளின் தொகுப்பு. தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு முதல் நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாள்தோறும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு முதல் நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் 41 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது.

  ஒமைக்ரான் பரவல் எதிரொலியால் ஜார்க்கண்டில் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

  புதுக்கோட்டை அருகே தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இதற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுவன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரண் அடைய வேண்டும் அல்லது முன்ஜாமின் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

  வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் அடிப்படை வசதிகளே இல்லாத இடங்களில் திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு உரிமம் அளித்தது எப்படி என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழகத்தில் மேலும், 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு நாள் தொற்று 800-ஐ நெருங்கியுள்ளது.

  பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்க வேண்டும் என்று பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  தென்காசியில் 3 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

  தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

  சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சரிடம் திருப்புகழ் குழு 90 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மழை நீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளது.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியுள்ளது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 7.35 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

  மயிலாடுதுறையில் பரிமள ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து முதல் நாள் நிகழ்ச்சியில் பெருமாள் சர்வ அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் வீதி உலா எழுந்தருளினார்.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 750 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 22 விழுக்காடு அதிகமாகும்.

  Read More : ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி.. சக்கரத்தில் சிக்கியதில் பலத்த காயம்

  லடாக்கின் பாங்காங் ஏரி அருகே பாலம் அமைத்து வருகிறது சீனா. அங்கே, 60 ஆயிரம் வீரர்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இந்தியாவும் பதிலடி தர ஆயத்தமாகிவருகிறது.

  Must Read : கோவில் திருவிழாவில் நடனமாடிய அதிமுக எம்எல்

  ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் கிரிக்கெட்டி போட்டியின் முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Tamil News, Top News

  அடுத்த செய்தி