Home /News /tamil-nadu /

Headlines Today | புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை முதல் போராடி வென்ற RCB வரை - இன்றைய தலைப்புச் செய்திகள்

Headlines Today | புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை முதல் போராடி வென்ற RCB வரை - இன்றைய தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

Headlines today | ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். - மேலும் படிக்க

  சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் அதிகரித்து 97 ரூபாய் 52 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசுகளும், டீசல் விலை 6 ரூபாய் 9 காசுகளும் உயர்ந்துள்ளது.  - மேலும் படிக்க 

  சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், மண்டல குழு தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல், ரிப்பன் மாளிகை மன்ற அரங்கில் நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும், குழுத் தலைவர் பதவியை திமுகவே முழுவதுமாக கைப்பற்றியது. - மேலும் படிக்க

  பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த MQM கட்சி எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவியதால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்தது. - மேலும் படிக்க

  குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டியதால் சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - மேலும் படிக்க

  தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  - மேலும் படிக்க

  மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவரும் வாகனங்கள், உதவியாளர் இன்றி இயங்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. -

  திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணகுமாரிடம் இருந்து கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - மேலும் படிக்க

  தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து, பாஜகவினர் அவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

  டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம், மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சீனாவின் ஷாங்காய் நகரில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரு நாட்களுக்கு டீசல் வாங்க யாரும் வர வேண்டாம் என சிலோன் பெட்ரோலிய நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. - மேலும் படிக்க

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. - மேலும் படிக்க

  வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. - மேலும் படிக்க
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Aadhar, College student, Commit suicide, Headlines, IPL, IPL 2022, MK Stalin, Pan card, Petrol Diesel Price hike, Srilanka, Tamil News

  அடுத்த செய்தி