Home /News /tamil-nadu /

Headlines : போலியோ சொட்டு மருந்துமுகாம் முதல் வலிமை ரிலீஸ் வரை - இன்றைய முக்கியச் செய்திகள் ( பிப்ரவரி 24)

Headlines : போலியோ சொட்டு மருந்துமுகாம் முதல் வலிமை ரிலீஸ் வரை - இன்றைய முக்கியச் செய்திகள் ( பிப்ரவரி 24)

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

Headlines Today: காசோலை மோசடி வழக்கில் குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு பிடியாணை பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பண மோசடி வழக்கில், நிழல் உலக தாதா, தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு  இருக்கலாம் என்ற கோணத்தில், மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான, நவாப் மாலிக்கை, அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

  சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  Also Read: அஜித்தின் வலிமை ரிலீஸான தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பரபரப்பு

  திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சாலை மறியலில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கிலும் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது அவர்களிடம் சிறப்பாக பணியாற்றுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  Also Read:  சிவகங்கையில் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள்!!

  காசோலை மோசடி வழக்கில் குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு பிடியாணை பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப்பாலம் இன்று முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தப் பாலத்தில் கடந்த 7-ம் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் மூடப்பட்டது. புதுப்பிக்கும் பணிகள் முடிந்ததை அடுத்து, வியாழக்கிழமை இரவு முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முக்கியமான தருணங்களை பதிவு செய்யும் விதமாக பிரமாண்டமான டிரோன் கண்காட்சி நடைபெற்றது. 1000 டிரோன்கள் பங்கு பெற்ற இந்த கண்காட்சியில் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் உருவங்கள் தத்ரூபமாக விண்ணில் ஒளிர்ந்தன.

  ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியானது. சென்னையில் உள்ள வெற்றி, ரோகிணி உள்ளிட்ட பல திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

  உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக, தேசிய அவசரகால நிலையை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.மாக்ஸர் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் ரஷ்யாவின் படைகள் உக்ரைனிலிருந்து வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

  வலிமை படத்தை வரவேற்கும் விதமாக, வேலூரில் அஜித் ரசிகர்கள் பைக் சாகசம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட் அவுட்டுக்கு, மேளதாளங்கள் முழங்க பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர்
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Children, DMK, Headlines, Jayakumar, MK Stalin, Polio vaccine, Valimai

  அடுத்த செய்தி